பீரோவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு


பீரோவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
x

அருப்புக்கோட்டை அருகே பீரோவை உடைத்து 5¼ பவுன் நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை அருகே பீரோவை உடைத்து 5¼ பவுன் நகையை திருடி சென்றனர்.

நகை திருட்டு

அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி சிவானந்தா காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 61). இவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் கட்டங்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள துணிமணிகள் சிதறி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

தொடர்திருட்டு

இதுகுறித்து ராஜசேகரன் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் ஆமணக்குநத்தம் ஊராட்சியில் ஆள் இல்லாத வீட்டை நோட்டம் பார்த்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர். கிராமப்பகுதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story