பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் திருட்டு


பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 Sept 2022 1:04 AM IST (Updated: 20 Sept 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

நகை திருட்டு

அருப்புக்கோட்டை பத்தரம் சவுண்டம்மன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). கேட்டரிங் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் சரவணகுமார் வேலைக்கு சென்றார்.

அவரது மனைவி முருகேஸ்வரி அருகே உள்ள துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து பட்டப்பகலில் சரவணகுமார் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்து 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர். மேலும் தடயங்கள் கிடைக்காமல் இருக்க மிளகாய் பொடியும் தூவி சென்றுள்ளனர்.

போலீசில் புகார்

இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த சரவணகுமார் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களால் அச்சத்தில் உள்ளனர்.


Next Story