வீட்டின் கதவை உடைத்து குத்துவிளக்கு திருட்டு


வீட்டின் கதவை உடைத்து குத்துவிளக்கு திருட்டு
x

பாளையங்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து குத்துவிளக்கை மர்மநபர் திருடிச் சென்றார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் முருகபெருமாள். இவருடைய மனைவி கமலாதேவி (வயது 75). இவரின் உறவினர் தனமணி வீடும் அதே பகுதியில் உள்ளது. தனமணி கடந்த 3-ந்தேதி சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனமணி வீட்டுக்கு சென்ற கமலாதேவி, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டில் இருந்த குத்து விளக்கு ஒன்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story