பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை,கெடிகாரம் திருட்டு


பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை,கெடிகாரம் திருட்டு
x

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை,கெடிகாரம் திருடுபோனது

மதுரை


மதுரை பை-பாஸ் ரோடு சிருங்கேரி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 65). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஒரு ஜோடி தங்க தோடு, 4 கைக்ெகடிகாரங்கள் போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story