ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகள் கொள்ளை


ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகள் கொள்ளை
x

சுசீந்திரம் அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஜவுளிக்கடையில் கொள்ளை

நாகர்கோவில் அருகே உள்ள கலைநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது27). இவர் சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு பிரபு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரபு கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு உள்ளே சென்று பார்தார். அப்போது, மேஜையில் வைத்திருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான துணிகள் ஆகியவை மாயமாகி இருந்தன. நள்ளிரவில் மர்ம ஆசாமி பூட்டை உடைத்து கைவரிசை காடடியது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சி

பின்னர் இதுபற்றி பிரபு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் தலையில் தொப்பியும், முககவசம், கையுரை அணிந்து கொண்டு பூட்டை உடைத்து திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தனிப்படை அமைப்பு

விசாரணையில், கடந்த 22-ந்தேதி இரவு மணக்குடியில் டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய வாலிபரின் உருவரும், துணிக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற வாலிபரின் உருவமும் ஒத்துப்போனது. இதனால், இரு இடங்களிலும் ஒரே வாலிபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே தொடர் கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம வாலிபரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story