வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகை- ரூ.10 ஆயிரம் திருட்டு
காட்டுப்புத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகை- ரூ.10 ஆயிரம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்டுப்புத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகை- ரூ.10 ஆயிரம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாய கூலி
தொட்டியம் அருகே உள்ள நத்தம் அக்ரகாரத் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி சுமதி (வயது 45). இந்த தம்பதிக்கு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் செல்லதுரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் சுமதி விவசாய கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமதி வீட்டை பூட்டிவிட்டு குளித்தலைக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
நகை-பணம் திருட்டு
பின்னர் பீரோவை உடைத்து அங்கு இருந்த 10½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர். மேலும் ஆதார்கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வைத்திருந்த பைகளையும் தூக்கி சென்றுவிட்டனர். இது குறி்த்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.