வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன்  நகைகள் திருட்டு
x

ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள் திருட்டு

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 48), ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இவரது மனைவி கோவிந்தம்மாள் இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று பரசுராமன், கோவிந்தம்மாள் இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு தனது நிலத்திற்கு சென்றுள்ளனர். இரவு அங்கேயே தங்கி கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளனர்.

இன்று காலை பரசுராமன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் பரசுராமனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து உள்ளே சென்றுபார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்கசங்கிலி, கம்மல், மோதிரம், வளையல் உள்பட 19 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பரசுராமன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story