2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
வந்தவாசி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவரது மகன் விஜயன் (வயது 41), இவருடைய மனைவி வித்யா.
இந்த நிலையில் நேற்று இரவு விஜயன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மர்ம நபர்கள் சிலர் விஜயன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் துரை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவை பார்த்தபோது 20 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து விஜயன் வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.
மேலும் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு வீட்டில் திருட்டு
இதேபோல் ஆராசூர் மெயின் ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மனைவி மஞ்சுளா (41). இவர் தனது இரண்டாவது மகள் திருமணத்துக்காக வீட்டைச் பூட்டிவிட்டு சென்று உள்ளார்.
திருமணம் முடிந்தபின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் பீரோவில் பார்த்தபோது அதில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மஞ்சுளா வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் செய்தார். அதன்பேரில் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரே ஊரில் 2 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.