பைப் உடைந்து வீணாகும் குடிநீர்


பைப் உடைந்து வீணாகும் குடிநீர்
x

நாட்டறம்பள்ளி அருகே பைப் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அக்ரஹாரம், குடியான் வட்டம் பகுதியில் நாட்டறம்பள்ளி- புதுப்பேட்டை சாலையோரம் பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் நேற்று திடீரென பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணியின்போது குடிநீர் பைப்லைன் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடியது.

இது குறித்து அப்பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story