குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

அருப்புக்கோட்டை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீணாகும் குடிநீர்

அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தாமிரபரணி மற்றும் வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் பாளையம்பட்டி சர்ச் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் வீடுகளுக்கு முறையான குடிநீர் வழங்கப்படாத நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாக சாலையில் செல்வது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை பகுதியில் தாமிரபரணி மற்றும் வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு சில இடங்களில் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இருப்பினும் கிடைக்கின்ற தண்ணீரை வைத்து சிக்கனமாக செலவு செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அருப்புக்கோட்டை பகுதியில் சில இடங்களில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.

பாளையம்பட்டி சர்ச் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். ஆதலால் உடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story