குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது
ராமநாதபுரம்
நயினார்கோவில்
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் கொல்லனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி முன்பு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக காவிரி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்கு போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் கொல்லனூர் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாயை சரி செய்து கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story