குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்
x

காவேரிப்பாக்கம் மேம்பாலத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம் ராஜாளி கப்பற்படை, திருத்தணி நகராட்சி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு, அத்திப்பட்டு, திருபாற்கடல் பாலாற்றங்கரையில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து அதன்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அத்திப்பட்டு பாலாற்று படுக்கை, சுமைதாங்கி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் குடிநீர் இரும்பு பைப்லைன் திருப்பாற்கடல்- காவேரிப்பாக்கம் மேம்பாலம் பகுதியில் உடைந்து தண்ணீர் ரோட்டில் வீணாக செல்கிறது.

இதனால் பழமையான பாலம் அதனுடைய உறுதி தன்மையை இழந்து தண்ணீர் தேங்கி சிதிலமடையும் சூழ்நிலை நிலவுகிறது. இது சம்மந்தமாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story