குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு செல்லும் மானூர் கூட்டு குடிநீர் திட்டக்குழாய் தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. கோடை காலம் நெருங்கி வரும் இந்த சமயத்தில் தண்ணீர் வீணாக செல்வதால் தட்டு்ப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். சிவகாசி மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story