குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி: -

சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுக்குடிநீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடற்கரை கிராமங்களான பூம்புகார், வானகிரி, மங்கைமடம், திருவெண்காடு, பெருந்தோட்டம், கீழமூவர்க்கரை, திருநகரி, கீழசட்டநாதபுரம், திருவாலி, தென்னாம்பட்டினம், அண்ணன் பெருமாள் கோவில், நாங்கூர், ராதா நல்லூர், கரைமேடு, சட்டநாதபுரம், எடக்குடி வடபாதி, கதிராமங்கலம், கன்னியாகுடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உப்பு மற்றும் காவிநீராக மாறியது.

இதனால் மேற்கண்ட கிராமங்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லி என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு மேற்கண்ட கிராமங்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் திருப்புங்கூர் ஆர்ச் அருகில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில வாரங்களாக குடிநீர் வீணாக சாலையில் சென்று அருகில் உள்ள வயல்வெளியில் கலந்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் தேங்கி சாலை சேதம் அடைந்து வருகிறது.

மேலும் அவ்வழியாக வாகனங்கள் ஒன்றை ஒன்று மாறும்பொழுது சாலையில் நடந்து செல்பவர்கள் மீது சாலையில் தேங்கியுள்ள நீர் தெளிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து கடற்கரை கிராமங்களுக்கு சீரான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story