வில்வித்தை போட்டியில் பேரணாம்பட்டு மாணவனுக்கு வெண்கல பதக்கம்


வில்வித்தை போட்டியில் பேரணாம்பட்டு மாணவனுக்கு வெண்கல பதக்கம்
x

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பேரணாம்பட்டு மாணவன் வெண்கல பதக்கம் வென்றான்.

வேலூர்

பேரணாம்பட்டு ஒன்றியம் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி- பிரியா தம்பதியினரின் மகன் ரிஷிகேஷ் (வயது 8). தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 3 ஆண்டுகளாக வில்வித்தை பயிற்சி பெற்று வந்த ரிஷிகேஷ் கடந்த 2021-ம் ஆண்டு மாநில அளவில் சென்னையில் நடந்த போட்டியில் மூன்றாமிடம் வென்று பரிசு பெற்றுள்ளார். 2022-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி நகரில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் 4-வது இடத்தை வென்றார்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தமிழகம் சார்பில் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கு பெற்று 3-வது இடம் பெற்று வெண்கல பதக்கம் பரிசு வென்றார்.

இதுகுறித்து மாணவன் ரிஷிகேஷ் கூறுகையில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெற்று வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், தனது சொந்த கிராமத்திற்கும் பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் என தெரிவித்தார்.


Next Story