தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி மாணவிக்கு வெண்கல பதக்கம்


தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி மாணவிக்கு வெண்கல பதக்கம்
x

ஆந்திர மாநிலத்தில் நடந்த தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி மாணவிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

தூத்துக்குடி

தென்னிந்திய அளவிலான தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக உயரம் தாண்டும் போட்டியில் வ.உ.சி. கல்லூரி மாணவி சஹானா கலந்து கொண்டு தென்னிந்திய அளவில் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார். இவர் சமீபத்தில் குஜராத்தில் நடந்த உயரம் தாண்டும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வெண்கல பதக்கம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி சஹானாவை வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு, உடற்கல்வி இயக்குனர் சிவஞானம், தூத்துக்குடி மாவட்ட தடகள செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தடகள தலைவர் அருள்முருகன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி (பொறுப்பு) ரத்ன ராஜ், முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக் வின்சென்ட் ஆகியோர் பாராட்டினர்.


Next Story