குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி பலி


குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
x
தினத்தந்தி 29 May 2023 12:45 AM IST (Updated: 29 May 2023 11:53 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே குளிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்தனர்.

கோயம்புத்தூர்

அன்னூர்

கோவை அருகே குளிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பள்ளி மாணவர்கள்

கோவையை மாவட்டம் அன்னூர் அருகே காக்காபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக்குமார் (வயது 10), வெற்றிவேல் (8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக்குமார் 5-வது வகுப்பும், வெற்றிவேல் 3-வது வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறை என்பதால் அண்ணனும், தம்பியும் அங்குள்ள ஒரு குட்டையில் குளிப்பதற்காக சைக்கிளில் சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. உடனே பெற்றோர் அவர்களை தேடி சென்றனர். அப்போது குட்டையின் வெளியே தீபக்குமார், வெற்றிவேல் ஆகியோரது சைக்கிள் மற்றும் உடைகள் இருந்தது.

அண்ணன், தம்பி பலி

இதை பார்த்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குட்டைக்குள் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது தீபக்குமார், வெற்றிவேல் குட்டையில் மூழ்கி மயங்கி கிடப்பது தெரியவந்தது. உடனே 2 பேரையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தீபக்குமார், வெற்றிவேல் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. குட்டையில் குளிக்க சென்ற அண்ணன்-தம்பி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story