விவசாயியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது


தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

நாலாட்டின் புத்தூர் அருகே உள்ள தர்மத்துபட்டி மேற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பாலமுருகன் (வயது 58). இவரது தம்பி முனியப்பன் (50). இருவரும் விவசாயிகள். இவர்களது வீடுகளும் அருகருகே உள்ளது. நேற்று முன்தினம் இரவு முனியப்பன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை பாலமுருகன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக நேற்று காலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் அரிவாளால் முனியப்பனை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முனியப்பனை உறவினர்கள் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கி பின், மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.


Next Story