கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணன் போக்சோவில் கைது


கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய   அண்ணன் போக்சோவில் கைது
x

எடப்பாடி பகுதியில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சங்ககிரி,

கல்லூரி மாணவி பலாத்காரம்

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு மாணவியின் பெரியப்பா மகனான 25 வயதுடைய வாலிபரிடம் அடிக்கடி சந்தித்து அதிக நேரம் பேசிக்கொண்டிருந்து உள்ளார். அண்ணன்-தங்கை உறவுமுறை என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தனது பெரியப்பா வீட்டிற்கு மாணவி சென்றார். அங்கு பெரியப்பா மகனான அண்ணன், தனது தங்கை உறவுமுறையிலான அந்த மாணவியை கட்டாயப்படுத்தி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த மாணவிக்கு கடந்த 14-ந் தேதி திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே மாணவியை பெற்றோர் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். இதில் மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் கூறினார்.

அண்ணன் கைது

இதையடுத்து அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது தான், முறை தவறிய உறவு பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் மாணவியின் பெரியப்பா மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது ெசய்தனர்.

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story