தொழிலாளி கொலையில் அண்ணன் கைது


தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே தொழிலாளி கொலையில் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே தொழிலாளி கொலையில் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி அடித்துக்கொலை

விளாத்திகுளம் அருகே சூரங்குடியை அடுத்த வடக்கு சேவல் காலனியைச் சேர்ந்தவர்கள் ராமநாதன் (வயது 38), சேதுராமன் (36). அண்ணன்-தம்பியான இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். பனையேறும் தொழிலாளிகளான இவர்கள் ஆடுகளையும் வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று இவர்களது ஆடு இறந்ததால், அதனை இறைச்சிக்காக விற்றனர். அதற்கான பணத்தை பங்கு பிரிப்பதில் அண்ணன்-தம்பிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் வீட்டில் தம்பி சேதுராமன் தூங்கியபோது, அவரை இரும்பு கம்பியால் அண்ணன் ராமநாதன் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சேதுராமன் பரிதாபமாக இறந்தார்.

அண்ணன் கைது

இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராமநாதனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெளியூருக்கு செல்வதற்காக, அங்குள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ராமநாதனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

---


Next Story