ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது
ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ் பஜார் பகுதியை சேர்ந்தவர் தாகூர் சுந்தர் (வயது 49). ஊர்க் காவல் படை வீரரான இவர் நேற்று முன்தினம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (28) என்பவர் ஒருவழிப் பாதையில் ஆட்டோவை ஓட்டி வந்தார். இதனை தாகூர் சுந்தர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார், அவரது அண்ணன் ஜெயமுருகன் (30) ஆகிய இருவரும் சேர்ந்து தாகூர் சுந்தரை ஆபாசமாக திட்டி, தாக்கியுள்ளனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமார், அவரது அண்ணன் ஜெயமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story