கோவில், கடைகளில் திருடிய அண்ணன்-தம்பி கைது
கன்னியாகுமரி அருகே கோவில், கடைகளில் திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி அருகே கோவில், கடைகளில் திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
உண்டியல் பணம் திருட்டு
கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தில் ஒரு கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. இதுபோல் கல்லுவிளையில் ரேஷன் கடையில் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டது. மாதவபுரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பூட்டு உடைக்கப்பட்டு பணம், செல்போன் போன்றவை திருட்டு போனது.
அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
அண்ணன், தம்பி கைது
இதுதொடர்பாக லீபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பால பிரசாத் (வயது30), அவரது தம்பி விஷ்ணு பிரசாத் (20) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்ேபாது இவர்கள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும், ரேஷன் கடையில் கைவரிசை காட்டியதும், மாதவபுரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணம், செல்போன் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.