ஜமாத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன்-தம்பி கைது


ஜமாத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன்-தம்பி கைது
x

ஜமாத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் உள்ளது. இதன் ஜமாத் தலைவராக அத்தாவுல்லா (வயது 47) என்பவர் இருந்து வருகிறார்.

ஜமாத்துக்கு சொந்தமான இடத்தின் அருகில் ஜவகர்லால் நேரு என்கிற ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இவருக்கு ராஜா (34), சுந்தர் (32) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தை அண்ணன்-தம்பியான ராஜா, சுந்தர் ஆக்கிரமிப்பு செய்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வருவாய் துறையினர் மூலமாக அளந்து கல் நடப்பட்ட நிலையில், அத்துமீறி கல்லை அகற்றியதை கேட்ட போது அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து அத்தாவுல்லாவை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் அத்தாவுல்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, சுந்தர் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story