தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்-போலீசுார் வழக்குப்பதிவு
தம்பியை அண்ணன் கததியால் குத்தினார். இத தொடர்பாக போலீசுார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி
உப்பிலியபுரத்தை அடுத்த எரகுடி முத்துராஜா தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (63). இவருக்கும் இவரது தம்பி கணேசன் (55) என்பவருக்கும் இடையே சொத்தை பிரிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் மகாலிங்கம் ஆத்திரத்தில் கணேசனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கணேசன் தாக்கியதில் மகாலிங்கம் காயம் அடைந்தார். அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story