விவசாயி கொலையில் அண்ணன்-தம்பிகள் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை


விவசாயி கொலையில் அண்ணன்-தம்பிகள் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை
x

ஆரணி அருகே பவர் டில்லருடன் விவசாயியை கொன்று கிணற்றில் வீசிய சம்பவத்தில் அண்ணன்-தம்பிகள் உள்பட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே பவர் டில்லருடன் விவசாயியை கொன்று கிணற்றில் வீசிய சம்பவத்தில் அண்ணன்-தம்பிகள் உள்பட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 50). விவசாயி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந் தேதி விவசாய நிலத்தில் பவர் டில்லர் ஓட்டுவதாக கூறி விட்டு சென்றார். அன்று இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சாவித்திரி மற்றும் உறவினர்கள் நிலத்துக்கு சென்றனர்.

அப்போது சுந்தர், பவர் டில்லருடன் கிணற்றில் பிணமாக கிடந்தார். இது சம்பந்தமாக சுந்தரின் மனைவி சாவித்திரி ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கொலை செய்யப்பட்டு பவர் டில்லருடன் கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த விநாயகத்தின் மகன்கள் நேரு (65), சேட்டு (66), சகாதேவன் (47), வெங்கடேசன் (45), நேருவின் மகன் சடையாண்டி (30), உறவினர் அன்பு மகன் சக்திவேல் (28) ஆகியோர் சுந்தரை கொலை செய்ததை போலீசார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

வழக்கு விசாரணை

இந்த கொலை வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே. விஜயா நேற்று இரவு தீர்ப்பு கூறினார். அதில் 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பின்போது வெங்கடேசன் மட்டும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மற்ற 5 பேரையும் போலீசார் சிறைக்கு கொண்டு சென்றனர்.

இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு கிடைத்துள்ளது.


Next Story