மளிகைக்கடைக்காரரை தாக்கிய சகோதரர்கள் கைது


மளிகைக்கடைக்காரரை தாக்கிய சகோதரர்கள் கைது
x

மளிகைக்கடைக்காரரை தாக்கிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே குளவாய்பட்டியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 44). இவர், முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் கடைவீதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் குளவாய்ப்பட்டியை சேர்ந்த அவரது உறவினர்களான ராசு மகன்கள் ரெங்சாமி (27) மற்றும் சின்னத்துரை (29) ஆகியோருக்கும் கோவில் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்குளம் கடைவீதியில் சாமிக்கண்ணு குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த ரெங்கசாமி, சின்னத்துரை ஆகிய இருவரும் சாமிக்கண்ணுவை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சாமிக்கண்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெங்கசாமி, சின்னத்துரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story