பட்டாசு வெடித்ததில் அண்ணன்- தம்பி படுகாயம்


பட்டாசு வெடித்ததில் அண்ணன்- தம்பி படுகாயம்
x

கோட்டூர் அருகே வெடிக்காமல் கிடந்த பட்டாசை எடுத்து தீ வைத்த போது அந்த பட்டாசு வெடித்ததில் அண்ணன்- தம்பி படுகாயமடைந்தனர்.

திருவாரூர்

கோட்டூர்;

கோட்டூர் அருகே வெடிக்காமல் கிடந்த பட்டாசை எடுத்து தீ வைத்த போது அந்த பட்டாசு வெடித்ததில் அண்ணன்- தம்பி படுகாயமடைந்தனர்.

வெடித்து சிதறிய பட்டாசுகள்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர்அருகே குறிச்சி கிராமத்தில் நேற்று முன்தினம் ஒருவர் வீட்டில் புது மனை புகுவிழா நடந்தது. விழாவில் பட்டாசு வெடிக்கப்பட்டது. இந்தநிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மன்மதன் மகன்கள் பிரசாந்த் (11), தீபன்(5) ஆகிய இருவரும் நேற்று மாலை வெடிக்காமல் கிடந்த சணல் வெடிகளை பிரித்து அதில் இருந்த மருந்தை ஒரு பானையில் கொட்டி தீவைத்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பிரசாந்த் மற்றும் தீபன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

சிகிச்சை

இதனால் அவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிறுவன் பிரசாந்துக்கு தலை, வயிறு மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தீபனுக்கு உடல் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story