கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். நிலுவைத்தொகை சமரச தீர்வு முகாம் வருகிற 19-ந்தேதி தொடக்கம்
கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். நிலுவைத்தொகை சமரச தீர்வு முகாம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். அதிவேக பாரத் பைபர் எப்.டி.டி.எச். இணைப்பு, செல்போன் சிம் கார்டுகள் சிறப்பு விற்பனை மற்றும் நிலுவைத்தொகை சமரசத்தீர்வு முகாம் கடலூர், நெய்வேலி, சிதம்பரம் தொலைபேசி நிலையங்களில் வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 21-ந்தேதி (புதன்கிழமை) வரையிலும், விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி தொலைபேசி நிலையங்களில் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. அதில் பி.எஸ்.என்.எல். அதிவேக இன்டர்நெட் பைபர் இணைப்பு, சிம்கார்டுகள் அதிரடி சலுகையில் வழங்கப்படும்.
மேலும் லேண்ட்லைன், பிராட்பேன்ட், பைபர் இணைப்பு கட்டண தொகை நிலுவை உள்ள வாடிக்கையாளர்கள் மெகா மேளாவில் சமரச தீர்வு மூலம் சலுகையில் செலுத்தி மீண்டும் இணைப்பை பெற்று பயன் அடையலாம். வாடிக்கையாளர்கள் இந்த தீர்வு முகாமில் பங்கேற்று சிறப்பு சலுகையில் புதிய பைபர் இணைப்புகள் (எப்.டி.டி.எச்.) மற்றும் புதிய சிம்கார்டுகள் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கடலூர் பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.