பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
x

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்

திருச்சி

தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் பி.எஸ்.என்.எல். மற்றும் பொதுத்துறை சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது. பி.எஸ்.என்.எல். 4ஜி தொடக்கத்துக்கு உரிய தடைகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பாரதிதாசன் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க தலைவர் சின்னையன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க செயலாளர் சுந்தரராஜ், ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் முபாரக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை அட்டைகளை கைகளில் ஏந்தியும், கழுத்தில் அணிந்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story