நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழ் மாநில பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் பி.எஸ்.என்.எல். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் பி.எஸ்.என்.எல். கோபுரங்களையும், ஓ.எப்.சி. கேபிள்களையும் தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4 ஜி சேவைகளை தொடங்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுயம்புலிங்கம், நிர்வாகிகள் அலெக்சாண்டர் கிளாசன், பேச்சிநாதன், ஜோஸ்ராஜ், அச்சுதானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.