பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

12 மணி நேர வேலை திணிப்பு, ஒப்பந்த ஊழியர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம் மற்றும் தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிளை செயலாளர் மதன் தலைமை தாங்கினார்.

முன்னதாக ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகி மணிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முருகன் நன்றி கூறினார்.


Next Story