வரிவாக்கி செலுத்தாத பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு 'சீல்' வைப்பு


வரிவாக்கி செலுத்தாத பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் வரிவாக்கி செலுத்தாத பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட தாலுகா அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். கிளை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடங்களுக்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.6.53 லட்சம் பல ஆண்டுகளாக பாக்கி இருந்துள்ளது.

இதுசம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பியும் வரி பாக்கி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நகராட்சி உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஆணையாளர் (பொறுப்பு) ஜெயப்பிரியா தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் நேற்று பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சென்றனர். அங்குள்ள நான்கு வழிப்பாதைகளிலும் பூட்டி 'சீல்' வைத்தனர்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story