பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 2017- ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 15 சதவீதம் உயர்வுடன் ஓய்வூதியம் அமல்படுத்தக் கோரியும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரியும், நிலுவையில் உள்ள மருத்துவப் படியை வழங்கவும், 2019-ல் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, மாவட்ட துணை தலைவர் கோலப்பன், கிளை செயலாளர் முத்துராமலிங்கம், துணை தலைவர் மோகன்தாஸ், துணை செயலாளர் பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.


Next Story