தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம
தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமர் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஐ.நா வேண்டுகோளின்படி பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்து உள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும், பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மரியஹெலன் ஜோசப் ஷீபா நன்றி கூறினார்.