தூத்துக்குடியில்பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில்பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

டெல்லியில் 05.04.23 அன்று 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி நடக்கிறது. இந்த கோரிக்ககைளை அமல்படுத்தக் கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பி.ராமர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சி.பன்னீர்செல்வம் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரம் மற்றும் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும், அனைத்து ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் குடியிருப்பு வசதியை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் கே.அரிராமச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story