புலி தாக்கி எருமை மாடு பலி


புலி தாக்கி எருமை மாடு பலி
x

ஊட்டி அருகே புலி தாக்கியதில் எருமை மாடு பலியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே புலி தாக்கியதில் எருமை மாடு பலியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வன விலங்குகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் வனவிலங்குகள் கால்நடைகளை தாக்கும் சம்பவங்கள் நடக்கிறது.

புலி தாக்கி எருமை பலி

இந்த நிலையில் ஊட்டி-கூடலூர் சாலையில் எச்.பி.எப்., பகுதியில் வளர்ப்பு எருமை மாடு ஒன்றை வனவிலங்கு வேட்டையாடி உள்ளது. இதன்பின்னர் மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விட்டு சென்றுள்ளது.

இதைப்பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் அங்கு சென்று வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பொதுமக்கள் பீதி

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருக்கிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்த நிலையில் புலி தாக்கியதில் எருமை இறந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. புலி குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்கு தாக்கி எருமை உயிரிழந்தது உள்ளது. புலி தாக்கி தான் உயிரிழந்ததா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். மேலும் புலி நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story