புதர்மண்டி கிடக்கும் பாசனசபை கட்டிடம்
புதர்மண்டி கிடக்கும் பாசனசபை கட்டிடம்
குடிமங்கலம்
பி.ஏ.பி திட்டத்தின் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குடிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளநிலையில் பொதுப்பணித்துறை சார்பில் பாசன விவசாயிகளுக்காக பாசனசபை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனருகில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது. விவசாயிகள் விளைபொருட்களை உலர் களங்களில் உலர வைத்து பின்கட்டிடத்தில் இருப்பு வைத்து கொண்டு செல்வது வழக்கம். மேலும் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கட்டிடம் பயன்பாடு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது எனவே கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.