மதுரையில் கட்டிட பொருட்கள் கண்காட்சி


மதுரையில் கட்டிட பொருட்கள் கண்காட்சி
x

மதுரையில் கட்டிட பொருட்கள் கண்காட்சி நாளை வரை நடக்கிறது

மதுரை


மதுரையில் கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டிட பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. தமுக்கம் மைதானத்தின் குளிரூட்டப்பட்ட அரங்கில் நடந்து வரும் இந்த கண்காட்சியை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் கண்காட்சியில், 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

கட்டுமான தொழில்நுட்பத்தின் நவீன உபகரணங்கள், கட்டிட பொருட்கள், வீட்டு ஆட்டோமேஷன், மின்சாதன பொருட்கள், ஆக்மென்ட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி உள்பட கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

பொறியாளர்களுக்கான கருத்தரங்கம், பொறியியல் மாணவர்களுக்கான போட்டிகள், பார்வையாளர்களுக்கு இலவச வாஸ்து ஆலோசனை, டி.டி.சி.பி. சட்டங்கள், விதிமுறைகள் குறித்த விளக்கங்களும் வழங்கப்படுகிறது. தொடக்க விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் சஞ்சய், கண்காட்சிக்குழு தலைவர் பொன் ரவிச்சந்திரன், சங்க துணைத்தலைவர் அறிவழகன், முன்னாள் தலைவர் வெற்றி குமரன், சங்க செயலாளர் குமரேஷ் பாபு, பொருளாளர் வெங்கடேஷ் பாபு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story