புதர்களுக்கு நடுவே இருந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது


புதர்களுக்கு நடுவே இருந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது
x

"தினத்தந்தி" செய்தி எதிரொலியாக தஞ்சை கீழவாசலில் புதர்களுக்கு நடுவே இருந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்..

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

"தினத்தந்தி" செய்தி எதிரொலியாக தஞ்சை கீழவாசலில் புதர்களுக்கு நடுவே இருந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்..

புதர்களுக்கு நடுவே அங்கன்வாடி மையம்

தஞ்சை கீழவாசல் பகுதி சாலைக்காரதெருவில் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.2½ லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மிகுந்த பயனடைந்துவந்தனர். இந்த நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பபட்டது.அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்போல் காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியில் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த விஷஜந்துக்கள்அங்கன்வாடி கட்டிடத்துக்குள்ளும், சமையல் அறைக்குள்ளும் அடிக்கடி புகுந்து வந்தன.இதனால் குழந்தைகள், ஊழியர்கள் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர்.

"தினத்தந்தி" எதிரொலி

இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதையும் தவிர்த்து வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று புதர்களுக்கு நடுவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றி வளர்ந்திருந்த கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும், கட்டிடத்தை சீரமைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


Next Story