கிறிஸ்துமஸ் பண்டிைக 'களை' கட்டியது
மார்த்தாண்டம் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை ‘களை’ கட்டியது. கடைகளில் ஸ்டார், அலங்கார விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
குழித்துறை,
மார்த்தாண்டம் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை 'களை' கட்டியது. கடைகளில் ஸ்டார், அலங்கார விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந்் தேதியை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அவர் பிறந்த போது வானில் ஒரு சிறப்பு நட்சத்திரம் தோன்றி அவரது பிறப்பை உணர்த்தியது. அதை பார்த்து 3 நாடுகளை சேர்ந்த ஞானிகள் பரிசு பொருட்களுடன் பெத்லகேம் சென்று குழந்தை இயேசுவை வணங்கினர்.
இவ்வாறு இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியில் நட்சத்திரம் (ஸ்டார்) முக்கிய இடம் பெற்று விளங்கியது. இதை உணர்த்தும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வீடுகள், கடைகள் மற்றும் ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் ஸ்டார்கள் கட்டி, பல வடிவங்களில் அலங்கார விளக்குகள் தொங்க விட்டு கொண்டாடுவார்கள்.
அலங்கார விளக்குகள்
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே உள்ளது. இதையொட்டி மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பண்டிகை 'களை' கட்ட தொடங்கி விட்டது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண ஸ்டார்கள் மற்றும் அலங்கார மின்விளக்குகள் கட்டி வருகிறார்கள்.
இதையொட்டி மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பலவிதமான ஸ்டார்கள், மின் விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் திரளாக சென்று கடைகளில் இருக்கும் ஸ்டார்கள், அலங்கார விளக்குகளை தேர்வு செய்து உற்சாகத்துடன் வாங்கி செல்கிறார்கள்.