காயாமொழியில் புகாரி ஷரீப் விழா
காயாமொழியில் புகாரி ஷரீப் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு அபூர்வ பிரார்த்தனை நடக்கிறது.
திருச்செந்தூர்:
காயாமொழியில் புகாரி ஷரீப் விழாவையொட்டி நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு அபூர்வ பிரார்த்தனை (துஆ) நடக்கிறது.
புகாரி ஷரீப் விழா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் (மிகராஜ்) சென்றதை நினைவு கூரும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் "மிகராஜ்" விழா 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது "புகாரி ஷரீப் விழா" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த விழாவையொட்டி ஒரு மாதம் காயாமொழி ஜூம்மா பள்ளியில் நபிகளாரின் பொன்மொழி தொகுப்பு அடங்கிய புகாரி கிரந்தம் ஓதப்பட்டு விளக்கங்கள் கூறப்படும்.
அபூர்வ பிரார்த்தனை
75-வது ஆண்டு புகாரி ஷரீப் கடந்த மாதம் (ஜனவரி) 18-ந் தேதி தொடங்கியது. விழாவிற்கு மவுலவி பைசுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். மவுலவி எம்.செய்யது இப்ராகீம் கலீலுல்லாஹ் அதாயி விளக்கம் உரை ஆற்றினார்.
நிறைவு நாளான நாளை (சனிக்கிழமை) இரவு 12 மணிக்கு மவுலவி ஏ.முகம்மது அஸ்ஹருத்தீன் மஹ்ழரி சிறப்புரை ஆற்றுகிறார். நள்ளிரவு 2 மணிக்கு மவுலவி எச்.அகமது அப்துல் காதர் மஹ்ழரி அபூர்வ பிரார்த்தனை நடத்துகிறார்.
உலகம் முழுவதும் போர் அகன்று அமைதிப்பூங்காவாக திகழவும், உலக மக்கள் நலத்தோடும் மகிழ்வோடும் வாழவும் பிரார்த்தனை நடத்தப்படும்.
------------