புகழூர் நகராட்சி கூட்டம்


புகழூர் நகராட்சி கூட்டம்
x

புகழூர் நகராட்சி கூட்டம் நடந்தது.

கரூர்

நொய்யல்,

புகழூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் கனிராஜ் வரவேற்றார். கூட்டத்தில் புகழூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான உதவித்தொகை வழங்கக்கோரி பெறப்பட்ட 164 விண்ணப்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்த்தல். மசக்கவுண்டன் புதூர் சமுதாய கூடத்தின் முன்பு சிமெண்டு அட்டை கூரை அமைத்தல். காயத்ரி நகர் பகுதியில் உள்ள மண் சாலைகளை தார் சாலையாக மாற்றி அமைத்தல். நகராட்சி பகுதியில் உள்ள தட்டாங்காடு, கக்கன் காலனி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய கழிவறை கட்டுதல். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த வடிகால்வாய்களை சீரமைத்தல்.

புகழூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் உள்ள அண்ணாநகர், செம்மடை ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுத்தல் என்பன உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புகழூர் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story