காளை விடும் திருவிழா
அரியூரில் நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர்.
வேலூர்
அடுக்கம்பாறை
வேலூர் அடுத்த அரியூரில் காளை விடும் விழா நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 194 காளைகள் பங்கேற்றன.
விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் மற்றும் சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டிருந்தது.
காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளை மாடுகளுக்கு வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
சீறி பாய்ந்தது ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.
மாடுகள் முட்டியதில் 22 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.81 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.61 ஆயிரம் என மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story