காளை விடும் விழா


காளை விடும் விழா
x
தினத்தந்தி 13 Aug 2023 5:28 PM IST (Updated: 13 Aug 2023 6:49 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே காளை விடும் விழா நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் சிறுபார்த்தம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளி விழாவை முன்னிட்டு காளை விடும் விழா இன்று காலை நடந்தது.

காளைகளை வாடிவாசல் வழியாக ஓடவிட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டது.

காளை விடும் விழாவை காண சேவூர், ராட்டினமங்கலம், ஆரணி எஸ்.யூ.வனம், பங்களா, அத்தியூர், பூசிமலை குப்பம், முள்ளண்டிரம், அரியப்பாடி, மேலேரி, சோமந்தாங்கல், கண்ணமங்கலம், வல்லம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.



Next Story