காளை விடும் விழா
மூஞ்சூர்பட்டில் காளை விடும் விழா நடந்தது. இதில் சிறுவன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
அடுக்கம்பாறை
மூஞ்சூர்பட்டில் காளை விடும் விழா நடந்தது. இதில் சிறுவன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
காளை விடும் விழா
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டில் பொங்கல் பண்டிகையொட்டி காளை விடும் விழா இன்று நடந்தது. சப்- கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் வரவேற்றார்.
இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 98 காளைகள் பங்கேற்றன. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் மற்றும் சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன.
10 பேர் காயம்
காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.
மாடுகள் முட்டியதில் முதியவர், சிறுவன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில் முதியவர் உள்பட 7 பேர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, கருணாகரன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் வருவாய் ஆய்வாளர் உலகநாதன், கிராம நிர்வாக அலுவலர் ரீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிணற்றில் விழுந்த காளை
இதற்கிடையில் மாடுவிடும் விழாவில் பங்கேற்ற காளை ஒன்று, வாடிவாசல் முடிந்து ஊருக்கு வெளியே உள்ள விவசாய நிலத்தில் ஓடிய போது அங்குள்ள விவசாய கிணற்றில் விழுந்தது.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர் மாட்டை கயிறு கட்டி மீட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.