தைப்பூசத்தை முன்னிட்டு காளை விடும் விழா
புதுப்பாளையத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் வீதியில் நின்று காளைகளை உற்சாகப்படுத்தினர். இதில் வேகமாக ஓடிய காளகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவை யொட்டி ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ், ஆரணி நகர இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக காலையில் புதுப்பேட்டை சிவசக்தி வள்ளிமுத்து மாரியம்மன் கோவிலில் தைப்பூச வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் நாடகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story