புல்லட் ராஜா பிறந்தநாள் விழா


புல்லட் ராஜா பிறந்தநாள் விழா
x

நெல்லையில் புல்லட் ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

புல்லட் ராஜா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை முருகன்குறிச்சி தூயதிரித்துவ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பின்னர் நடந்த ரத்ததான முகாமை ரத்ததானம் வழங்கி புல்லட் ராஜா தொடங்கி வைத்தார். முருகன்குறிச்சி மனவளர்ச்சி குன்றியோருக்கான அன்பின் இல்லத்தில் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து எல்.எஸ்.மகாலில் கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, தி.மு.க. நெல்லை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், தி.மு.க. துணை செயலாளர் சுரேஷ், கவுன்சிலர் நித்ய பாலையா, பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் சுரேஷ், வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், முன்னாள் வக்கீல் சங்க தலைவர் சூரிய நாராயணன், வக்கீல் பிரபாகரன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு, அகில இந்திய நாடார் பேரவை ராஜ்நாடார், திருமண்டல பொருளாளர் மனோகர், தூய யோவான் கல்லூரி செயலாளர் செல்வராஜ், மேரிசார்ஜென்ட் பள்ளி தாளாளர் அல்பிரட், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், செய்தி தொடர்பாளர் சுதாகர், சமத்துவ மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் சேவியர், விடுதலை சிறுத்தைகள் கட்சி கார்த்திக், டாக்டர் அலெக்சாண்டர் சோமு, தொழில்அதிபர்கள் எஸ்.கே.எம்.சிவக்குமார், குறிச்சி ஆனந்த், சேவியர் காலனி தினகரன், ராபின் கார்ஸ் உரிமையாளர் ராபின், ஜே.வி.ஆர். கார்ஸ் உரிமையாளர் ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story