மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே உள்ள ஊனையூர் பாலமுருகன் கோவில் சந்தன காப்பு திருவிழாவையொட்டி நேற்று காலை 6 மணியளவில் 30-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டுவண்டிகள் பங்கு பெற்றன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இருபிரிவாக நடத்தப்பட்டன.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டன. இதில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இதில் முதல் பரிசு மாத்தூர் சேரன் செங்குட்டுவன், 2-ம் பரிசு கள்ளந்திரி சிவபிரபு, 3-ம் பரிசு கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், 4-ம் பரிசு கானாடுகாத்தான் அருண் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

சீறிப்பாய்ந்த மாடுகள்

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவு 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதன் பந்தய தொலைவு போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட மாடுகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இந்த போட்டியில் முதல் பரிசு வெளிமுத்தி வாகினி, 2-ம் பரிசு வெள்ளலூர் நிரஞ்சன், 3-ம் பரிசு சூரக்குண்டு அமர்நாத், 4-ம் பரிசு அப்பன்திருப்பதி கிட்டு ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதையடுத்து, வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற காரைக்குடி- திருச்சி பைபாஸ் சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story