மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

காமன் பண்டிகையையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் மன்மத சுவாமி காமன் பண்டிகையையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 63 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இந்த போட்டிகள் பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளில் நடைபெற்றது. பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளை சாலையில் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர். இதில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பணம், கேடயம் மற்றும் கிடாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருப்புனவாசல் மண்டகப்படிதாரர்கள், தர்மசாஸ்தா நற்பணி மன்றம் மற்றும் திருப்புனவாசல் கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story