மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்


மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்
x

மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மதுரை

மேலூர்

மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மேலூர் தொகுதி தி.மு.க. சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டிகளை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான பி.மூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் பெரிய மாட்டுவண்டி பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 18 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

அதில், புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி அம்பாள், மதுரை ஆரப்பாளையம் ஆனந்த், மேலூர் எட்டிமங்கலம் பங்கஜம் கணேசன் ஆகியோர் மாடு முதல் பரிசு ரூ.2,00,070-ம், தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரம் விஜயகுமாரின் மாடுகள் 2-ம் பரிசு ரூ.1,50,070-ம், நெல்லை மாவட்டம் மாநில காளைகள் வளர்ப்போர் நல சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் மாடுகள் மூன்றாம் பரிசாக ரூ.1,00,070-ம், தூத்துக்குடி மாவட்டம், ஜக்கம்மாள்புரம் பரமசிவம், தச்சேரி தளவாய்புரம் பரமசிவன், கரு காளியம்மன் மாடுகள் 4-ம் பரிசு ரூ.25,070-ம் வென்றன.

பரிசுகள்

2 தனித்தனி சுற்றுகளாக சின்ன மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது. முதல் சுற்றில் 17 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் மதுரை பரவை சோனைமுத்துசேர்வை சின்ன வேலம்மாள், ஏரியூர் பெத்தாட்சி அம்பலம் மாடுகள் முதல் பரிசையும், தூத்துக்குடி மாவட்டம், துரைச்சாமிபுரம் சுரேஷ்குமார் மாடு 2-ம் பரிசையும், தானாவயல் வெங்கடாசலம், நாட்டானி சூர்யா பிரதர்ஸ் மாடுகள் 3-ம் பரிசையும், தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரம் பி.விஜயகுமார் மாடுகள் 4-ம் பரிசினையும் வென்றன.

2-வது சுற்றில் 16 மாடுகள் கலந்து கொண்டன. இதில் தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரம் விஜயகுமாரின் மாடுகள் முதல் பரிசும், மாங்குளம் தெய்வேந்திரன் அம்பலம் நினைவாக கீழவளவு சக்தி அம்பலம் மாடுகள் 2-ம் பரிசும், இலங்கிபட்டி அர்ஜுனன் அம்பலம் ஆண்டியம்பலம் மாடுகள் 3-ம் பரிசும், திருச்சி வெள்ளந்தாங்கியம்மன் துணை செந்தில் பிரசாத் மாடுகள் 4-ம் பரிசும் வென்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டி ஓட்டுனர்களுக்கும் அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மேலூர் நகராட்சி தலைவர் முகமதுயாசின், மேலூர் நகர் அவை தலைவர் மார்க்கெட்ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story